பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2015

உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக இலங்கையர்

நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் குமார் தர்மசேன நடுவர்களில் ஒருவராக செயற்படவுள்ளார்.
இப்போட்டியில் ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றுமொரு நடுவராக செயற்படவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த  ரஞ்சன் மடுகல்ல என்பவர் போட்டியின் மத்தியஸ்தராக செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாளை ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்குபற்றும்  நடுவர்கள் விபரம்

குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோ
ரஞ்சன் மடுகல்ல – மத்தியஸ்தர் (இலங்கை)
மரைஸ் எரஸ்மஸ் – மூன்றாவது நடுவர்
இயன் கோல்ட் – நான்காவது நடுவர்.