பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2015

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்ப



காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்பை ஏற்று, திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா, மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள், வணிகர் அமைப்புகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு, எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தெரிவித்துள்ளன.