பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2015


தொண்டமானாறு பகுதியில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சரால் வீட்டுத் திட்டம் கையளிப்பு 
 சுவிஸ் அரசின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இன்று  சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் திறந்து
வைத்து பயனாளிகளிடம் கையளித்தார்.
 
தொண்டமனாறு, அக்கரைப்பகுதியில் இந்த வீட்டுத்திட்டம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுவிஸ் அதிகாரிகள் ஹலோட்ரஸ்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
 
இதேவேளை குறித்த பகுதியில் சுவிஸ் அரசினால் தலா ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் சுமார் 35 வீடுகள் மற்றும் ஒரு சனசமூக நிலையம் மற்றும் ஒரு முன்பள்ளி ஆகியன அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.