பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2015

முன்னாள் போராளிகளுடன் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் கலந்துரையாடல்
 மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சு ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு உதவித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் குறித்த குடும்பங்களை அமைச்சர் டெனீஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில், புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மாவீரர்களின் குடும்பங்கள், காணாமல் போனோரின் பெற்றோர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதுடன், தங்களின் நிலை தொடர்பாக தெளிவு படுத்தியுள்ளனர்.
மேலும் இவ்விடயத்தில் எந்தவித அரசியல் வாதிகளையும் உள்வாங்காது தூய நோக்கோடு முன்னகர்த்திச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர்.
புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மரணமடைந்த போராளிகளின் குடும்பங்களையும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இவ்விடயத்தில் அரசியல் கலப்படமின்றி செல்வதே எல்லோருக்கும் நன்மை பயக்குமென்றும்,
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த சவால்கள் வந்தாலும் அதற்கு முகம் கொடுக்க தயார் எனவும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இதன்போது தெரிவித்துள்ளார்.