பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2015

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: க.அன்பழகன் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணை



ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு பெங்களுரு சிறப்பு கோர்ட் விதித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.