பக்கங்கள்

பக்கங்கள்

1 மார்., 2015

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலய காணியை தருமாறு அப்பாடசாலை கல்வி சமூகம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை


இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை விடுவித்து தருமாறு அப்பாடசாலை கல்வி சமூகம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விஸ்வமடு பகுதியில் முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியில் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.
இதனால் இப்பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு போதிய இடவசதியின்மையால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அல்லலுறுகின்றனர் என கல்வி சமூகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே குறித்த பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி இக்காணியை விடுவிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பாடசாலை கல்வி சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.