பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2015

மோடி உரை ; நாடாளுமன்றுக்கு கடும் பாதுகாப்பு

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதை கருத்திற்கொண்டு கடும்பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
 
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும 13ஆம்  திகதி  இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
 
அதற்கான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 13ஆம்  திகதி  இலங்கைக்கு வரும் மோடி அன்றையதினம் பிற்பகல் 3. 15 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். 
 
மேலும்  நாடாளுமன்ற வளாகம்  முழுமையாக சோதனையிடப்படவுள்ளதுடன்  பார்வையாளர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அதிதிகளே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமாகவே வாகனங்களை அன்றையதினம்  ஓட்டிச்செல்ல வேண்டும்  என்றும்  கோரப்பட்டுள்ளது.