பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2015

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் பெட்ரோல் விற்பனையாளர்கள் போராட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

அறிக்கையின்படி  விற்பனையாளர்களுக்கு கமிஷன் தொகை வழங்கப்படவில்லை. தற்போது, பெட்ரோலுக்கு ரூ.2ம், டீசலுக்கு ரூ.1.20ம் வழங்கப்படுகிறது. இது எங்களுக்கு  போதுமானதாக இல்லை. எனவே, அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரையை உடனே மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். எங்களுடைய வேலை நிறுத்த  போராட்டத்தால், மத்திய அரசுக்கு ரூ.725 கோடியும், மாநில அரசிற்கு ரூ.25 கோடியும் கலால் வரி இழப்பு ஏற்படும். இந்த போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 4,500  பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 53 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.