பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2015

இரவு 11 மணிவரை நீடித்த பாராளுமன்ற அமர்வு
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நேற்றைய பாராளுமன்ற அமர்வுகள் இரவு 11.10 வரை நீடித்திருந்தன.
திருத்தச் சட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பு 7.30 மணியளவில் நிறைவடைந்த போதிலும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
விவாவத்தின் இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 7.30 மணியளவில் நிறைவடைந்த போதிலும் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 56 சரத்துக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தி இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்தது.
இரண்டு தடவைகளும் பெயர் கூவியே வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் சரியாக இரவு 11 மணிக்கு இரண்டாவது வாக்கெடுப்பு நிறைவேறியது.
இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல்சிறிபால டி சில்வாவினதும் நன்றி கூறலுடன் சபை நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன.
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.