பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2015

11 பேரை போகோ ஹராம் தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம்


நைஜீரியாவில் 11 பேரை போகோ ஹராம் தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக போராடி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து பல அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களிடமிருந்து அந்நாட்டு மக்களை காப்பாற்ற நைஜீரிய ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் மலைப்பிரதேச நகரமான ஜிவோசா(Gwoza) பகுதி போகோ ஹராம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ராணுவம் ஈடுபட்டு இருந்தது.
ஆனால் இதை அறிந்து கொண்ட தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களில் 11 பேரை பிடித்து அவர்களை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.