பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2015

12ம் திகதி தேசிய துக்க தினம்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் தினமான எதிர்வரும் 12 ம் திகதியை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
தேரரின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளும் இணைப்பாளராக கண்டி மாவட்ட அதிபர் செயற்படவுள்ளார்.
சிங்கப்பூர், மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்த அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரரின் பூதவுடல் நாளை இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.