பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2015

19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு


19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் நோக்கில் 19ம் திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தில் திருத்தங்களை செய்யும் நோக்கில் சட்ட மா அதிபர் யுவான்ஜித் விஜயதிலக்கவினால் 19ம் திருத்தச் சட்ட நகல் வரைவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த உத்தேச சட்டத் திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
19ம் திருத்தச் சட்டத்தின் ஒரு சில சரத்துக்களை அமுல்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.