பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2015

ஸ்ரீ.சு.கவின் ஆதரவு இல்லாவிடினும் 19ஆம் திருத்த சட்டம் நிச்சயம் சமர்பிப்பு


19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் நாளைய தினம் அதனை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சட்டம் நாளை மற்றும் நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ள நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 19வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்துடன் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்ட மூலம் இன்று மற்றும் நாளைய தினங்களில் சமர்பிக்கப்படாவிட்டால் 19ற்கு ஆதரவாக வாக்களிக்கபடமாட்டதென நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மீன்பிடி துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.