பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2015

எதிர்வரும் 20ம் திகதி இலங்கை வரும் பசில்! நீதிமன்றில் இன்று அறிவிப்பு


இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ம் திகதி நாடு திருப்பவுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று  
அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரு வாரங்களில் நிதி மோசடி குறித்த விசாரணை பிரிவில் பசில் வாக்குமூலம் அளிப்பார் என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி மோசடி தொடர்பான வழக்கு இன்று கடுவெல நீதிவான் நிதிமன்றில் இடம்பெற்றது.
திவிநெகும திணைக்கள நிதியை மோசடி செய்தமை. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்காக திணைக்களத்தின் நிதியை பயன்படுத்தியமை, மாநாடு ஒன்றுக்காக 70 மில்லியன் ரூபா பணத்தை செலவிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பசில் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,  பசில் ராஜபக்ஷ இலங்கை வந்ததும் அவர் விமான நிலையத்திலிருந்தே நிதி மோசடி குற்றப்பிரிவினருக்கு வாக்குமூலம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.