பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2015

மத்திய அமைச்சருக்கு எதிராக சாலை மறியல் - சென்னையில் காங்கிரசார் 200 பேர் கைது


சென்னை திருவொறற்றியூரில் சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி அவதூறு பேசியதாக மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங்க்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய இணை அமைச்சர் பதவியை கிரிராஜ் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. 

சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், கிரிராஜ் சிங்குக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.