பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2015

யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி புதிய கட்டடம்


யாழ் மத்திய கல்லூரியில் ஞாபகார்த்த மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல்
நாட்டு விழா இன்று  இடம்பெற்றது.

 
கல்லூரியின் 200ஆவது ஆண்டின் நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த மண்டபம் ஒன்று கல்லூரியின் வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.

 
நிகழ்வின் பிரதம விருந்தினராக தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் ஆசியுரையை சர்வமத குருமாரும் வழங்கியிருந்தனர்.

 
இக் கட்டிடம் தந்தை செல்வா அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.