பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2015

200 குவித்தும் மழையால் பெங்களூர் ஆட்டம் வீண் 

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் மோதின.

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த 29வது போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது
இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களான கெய்ல் 10 ஓட்டங்களும், அணித்தலைவர் கோஹ்லி 1 ஓட்டத்திலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் அரைசதம் கடந்து 57 ஓட்டங்களும், மன்தீப் சிங், தினேஷ் கார்த்திக் தலா 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் குவித்தது. சர்ப்ராஸ் கான் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
பெங்களூர் அணி விளையாடி முடியும் சமயத்தில் பெய்யத்தொடங்கிய மழை விடாமல் பெய்ததால் ராஜஸ்தான் அணி 1 பந்து கூட விளையாடாமல் போட்டி முடிவுற்றது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.