பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2015

ஆந்திர போலீசார் வேண்டும் என்றே 20 தமிழர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்: நடிகை ரோஜா கண்டனம்

ஆந்திர சிறப்பு படை போலீசார், வேண்டும் என்றே கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்று விட்டு, அதை திசை
திருப்ப, ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட, பழைய செம்மரங்களை வரிசையாக போட்டுள்ளனர் என்று சித்தூர் மாவட்டம் நகரி சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.,வும், நடிகையுமான ரோஜா கூறியுள்ளார்.

திருத்தணியில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில், செம்மரம் வெட்டச் சென்றதாக, தமிழகத்தைச் சேர்ந்த, 20 கூலித் தொழிலாளர்கள், ஆந்திர மாநில அரசு உத்தரவுப்படி, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆந்திர சிறப்பு படை போலீசார், வேண்டும் என்றே கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்று விட்டு, அதை திசை திருப்ப, ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட, பழைய செம்மரங்களை வரிசையாக போட்டுள்ளனர் என்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும், கூலித் தொழிலாளர்களை சுட்டு கொலை செய்வதால் மட்டும், செம்மரம் கடத்தலை தடுத்து விட முடியாது. வனத் துறையினர், சிறப்பு படை போலீசாரை மீறி, செம்மரக் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது, கடத்தல் நடக்கிறது என்றால், இவர்களும், அவர்களுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் தலைகளின் ஆசிர்வாதமும் தான் காரணம். 

உரிய முறையில் விசாரணை நடத்தி, கடத்தல்காரர்களையும் பின்னணியில் இருக்கும் பெருந் தலைகளையும் கைது செய்ய வேண்டும் என்றார்.