பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2015

25.04.2015 இத்தாலி நாட்டின் சுதந்திர தினம் அன்று தமிழ் இளையோர் அமைப்பு

IMAG0756
25.04.2015 இத்தாலி நாட்டின் சுதந்திர தினம் அன்று தமிழ் இளையோர் அமைப்பு – இத்தாலி கடந்த வருடங்கள் போல் 1945ம் ஆண்டு
இரண்டாம் உலகப்போரில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 போராளிச் CERVI சகோதரர்களின் வீட்டில் (Reggio Emilia – Gattatico) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டது.
வெகு சிறப்பாக நடைபெற்ற 70ம் சுதந்திர தின நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் திரு Martin Schulz அவர்களும், இத்தாலி பாராளுமன்ற கீழ்ச் சபையின் தலைவர் திருமதி Laura Boldrini, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Cecile Kyenge, மேலும் S&D ஐரோப்பிய பாராளுமன்ற அரசியல் கட்சித் தலைவர் Gianni Pittella இன்னும் பல ஐரோப்பிய அரசியல் முகவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் இளையோர் அமைப்பு – இத்தாலி ஈழ மக்களின் மீது நடாத்தப்படும் இனப்படுகொலைத்  தொடர்பாக துண்டுப்பிரசுரங்கள், படங்கள், விளக்கங்கள் வழங்கியது. குறிப்பாக சுன்னாகம் மக்களின் நில நீர் மாசுபடுத்தல் தொடர்பான ஓர் விழிப்புணர்வு பிரச்சாரமும் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களால் நடாத்தப்பட்டது. அதற்கு இத்தாலி மக்கள் தங்களது ஆதரவை வழங்கி இருந்தனர்.
தாயகம் தொடர்பான பணிகளையும் செய்து மேலும் நிகழ்வின் ஒருங்கினைப்பாளர்களுடன் இணைந்து அதன் முழுமைக்கு தங்களது உதவியையும் வழங்கியிருந்தனர்.
15 000க்கும் மேற்பட்ட இத்தாலி மக்களுடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுடன் அம்மக்களிற்கு தம்முடைய அடையாளம், வரலாறு, நிலவரம் அனைத்தையும் கூறி விளக்கம் கொடுக்கும் தினமாக தமிழ் இளயோர் அமைப்பு இத்தாலி இந்நாளை பிரியோகித்தது.IMAG0757IMAG0767IMAG0768IMAG0812IMAG0931IMAG0752IMAG0531IMAG0431