பக்கங்கள்

பக்கங்கள்

21 ஏப்., 2015

நாடாளுமன்ற அமர்வுகள் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு

  
 
 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆஜராகுமாறு விடுத்த பணிப்புரையை அடுத்து நேற்றுக்காலை முதல் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையின் எதிரொலியாக நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 27ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி இன்றைய தினமும் நாளைய தினமும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த 19வது திருத்தம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றம் மீண்டும்  27ம்திகதி கூடும் போது எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.