பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2015

எவரெஸ்ட் மலைஉச்சியில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு

 பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் வதந்தி பரப்பியதாக 31 பேர் கைது செய்யப்பட்டனர். நேபாளம் கூர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற புள்ளிகள் பதிவானது. இதில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வதந்திகளை பரப்பியதாக 31 பேரை கைது செய்தனர். நில அதிர்வு ஏற்பட்ட வீடுகளில் புகுந்து திருடிய 21 பேரையும் கைது செய்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நேபாளத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி அதில் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. எவரெஸ்ட் மலைஉச்சியில் சிக்கியுள்ளவர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர்