பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2015

சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் உள்ளிட்ட 4வடக்கு ஊடகவியலாளர்களுக்கு பாய்ந்தது “CID” விசாரணை.

மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு
அழைத்துள்ளனர்.
நாளை மறுதினம் தெமடகொடவில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காரியாலயத்துக்கு வருமாறு அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சிங்கள மொழியிலேயே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவின் சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் உள்ளிட்ட 4 பேருக்கு இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.