பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2015

விடுதலைப்புலிகளை தோற்கடித்த மஹிந்தவை தமிழர்களே தோற்கடித்தனர்!- தினேஸ் குணவர்த்தன


மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு தமிழர்களே என்றும், விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்தினால் மஹிந்தவை தோற்கடிக்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இருந்ததாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 
தாம் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவை கொலை செய்யப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியமை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தினேஸ் குணவர்த்தன பதிலளிக்க மறுத்துள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு தமிழர்களை அவர் காரணம் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்தினால் மஹிந்தவை தோற்கடிக்க வேண்டிய அவசியம் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு 58 லட்சம் மக்கள் வாக்களித்தமையானது வடக்கு கிழக்கை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதையே குறித்து நிற்கிறது என்று தினேஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர், மஹிந்த ராஜபக்ச செல்வாக்கை கருதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் அவருடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்