பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2015

புலிகளின் தேவைக்கு அமைய கோத்தபாய இலக்கு வைக்கப்படுகின்றார்!– பந்துல


தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு தேவையான வகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலக்கு வைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புலி ஆதரவு புலம்பெயர் சமூகத்திற்கும், காலனித்துவ நாடுகளுக்கும் கோத்தபாயவை தண்டிக்கும் தேவையுண்டு.
அந்த தேவைகளை தற்போதைய அரசாங்கம் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றது.
எனினும், இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள், புலிகளின் தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யக் கூடாது.
கொடிய பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதில் முதன்மை பங்கு வகித்து வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவேயாகும்.
காலனித்துவ நாடுகளும் புலம்பெயர் புலி ஆதரவு தரப்புமே தற்போதைய அரசாங்கத்தை வெற்றிபெறச் செய்தது.
இவர்கள் தேசியத் தலைவர்களை வேட்டையாடும் இலக்கில் இவ்வாறு ஆதரவளித்துள்ளனர்.
அந்த முயற்சிகளக்கு இடமளிக்கப்பட முடியாது என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கோதபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் நேற்று பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்