பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2015

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்









பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து இப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு கொள்ளுப்பிட்டி சந்தியை அடைந்த வேளை பொலிஸார் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தும் பேரணியை கலைக்க முற்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமையை அடுத்து தற்போது இந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தற்போதும் 500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு கூடியிருப்பதாகவும், கலகத் தடுப்பு காவற்துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.