பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2015

நரேந்திர மோடியை மைத்திரிபால சிறிசேனவுடன் நேரில் பேசுமாறு வலியுறுத்து


தமிழக மீனவர் பிரச்சினையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாகப் பேசி, தீர்வுகாண வேண்டுமென தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
 
தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டு மெனக் கருணாநிதி கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் விடுத்திருக் கும் அறிக்கையில், 
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீன வர்கள் பாரபட்சமின்றி கைதுசெய் யப்படுவார்கள் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் ஐந்து விசைப்படகுகளுடன் கைதுசெய்யப்பட்டு, காங்கேசன்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கும் சம்பவத்தின் பின்னணியில் கருணாநிதி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மீனவப் பிரதிநிதி களையும் தமிழக அரசையும் அழைத்து பிரச்சினைகளைக் கேட் டறிந்து, இலங்கை ஜனாதிபதியிடம் நேரடியாகப் பேச வேண்டுமென்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
 
இலங்கைக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
 
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ், தமிழக மீனவர் பிரச்சினையை சர்வதேச நீதி மன்றத்தில் முறையிட்டு தீர்வு காணவேண்டுமெனக் கோரியுள்ளார்.
 
மேலும், வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கைக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச பொலிஸ் மூலம் மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினையில் இலங்கையை வழிக்குக் கொண்டு வர முடியும் என்றும் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
 
எனவே, அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான சட்டபூர்வ உரிமையை தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு பெற்றுத் தரவேண்டும் என்று ராமதாஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.