பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2015

துஷார பெரேரா இரகசியப் பொலிஸாரால் கைது


ஐக்கிய தேசியக் கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளராக இருந்து, கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஆளும்தரப்புக்கு தாவிய துஷார பெரேராவை இரகசியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்கள் தயாரித்த குற்றஞ்சாட்டின் இடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் துஷார பெரேராவுக்கு எதிராக காசோலை மோசடி குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.