பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2015

தேசியக்கொடியில் பச்சை, மஞ்சள் கோடுகள் நீக்கப்பட்டமையை ராவணா பலய எதிர்க்கிறது


தேசியக்கொடியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமையை தாம் கண்டிப்பதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசியக்கொடியில் உள்ள சகோதரத்துவம் மற்றும் மரியாதை என்பவற்றுக்கான பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலான இரண்டு கோடுகள் அகற்றப்பட்ட நிலையில், நேற்று நாடாளுமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் இன்று கோத்தபாயவுக்கு ஆதரவாக லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் கொடிகளை பலர் ஏந்தியிருந்தனர்
இதில் முக்கிய அரசியல்வாதிகளும் உள்ளடங்கியிருந்தனர்.
எனினும் இது தமக்கு தெரியாமலேயே ஆர்ப்பாட்டத்தின்போது பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராவணா பலயவின் அழைப்பாளர் இட்டாகந்த சந்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த கொடிகள் குறித்த இடங்களுக்கு கொண்டு வரப்பட்டமைக்கும் தமது அமைப்புக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.