பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2015

ஸ்ரீ.சு.கவின் பிரதம வேட்பாளராக சந்திரிக்காவை நியமிக்க தீர்மானம்?


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஆலோசனைகள் முன்வைப்பதற்கு ஆயத்தமாவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டிய அவசியமிருப்பதாகவும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்தில் தான் மீண்டும் அரசியலுக்கு வருவது அசிங்கமான விடயமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இந்திய ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.