பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2015

வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி; கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை


யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மா
காண சபை தீவிர நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது.

இன்று நடைபெற்று வரும் வடக்கு மாகாண சபையின்   28ஆவது மாதாந்த அமர்வில் அவைத்தலைவரால் குறித்த விடயம் சபைக்கு முன்வைக்கப்பட்டது.

தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தினால்  பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே  வாள்வெட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் சபையின்  ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இங்கு நடைபெற்று வரும்  வாள்வெட்டுக்கள்  , வன்முறைச்சம்பவங்கள் குறித்து நிறுத்துவதற்கு உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்  அனுப்பியுள்ளேன்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எனக்கு பொலிஸ் மா அதிபர் உதியளித்துள்ளார் என முதலமைச்சர் தெரிவித்தார்.

அதன்போது தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான சம்பவம்  தொடர்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு தொடர்ந்தும்  கண்காணிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். எனினும்  முதலமைச்சர் தலைமையிலேயே இந்ந விடயம்  தொடர்பில் நடவடிக்கை எடுப்பே சிறந்தது என அவைத்தலைவர் வலியுறுத்தியிருந்தார்.