பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2015

மாகாண சபை வெற்றிடத்துக்கு உறுப்பினர் நியமிப்பதில் இழுபறி


வடக்கு மாகாண சபை ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உறுப்பினர் பதவி வெற்றிடமாகி ஒரு மாதம்
கடந்துள்ளது.
 
அந்த வெற்றிடத்துக்கு புதிய ஒருவரை நியமிப்பதில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளிடையே இழுபறி நிலை காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
 
 
 
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வீ.கனகசுந்தரசுவாமி கடந்த பெப்ரவரி மாதம் சுகவீனம் காரணமாக இறந்தார்.அவரது மாகாண சபை  உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
 
இந்த வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் நியமிக்கவில்லை.