பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2015

வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் : டெனீஸ்வரன் தெரிவிப்பு

கைத்தொழில் உற்பத்தி நிலையங்களை அமைப்பதனூடாக மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து அவர்களது வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடையும். 
 
இவ் விடயங்களை கருத்தில் கொண்டே குறித்த கற்பூர உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துக் கொடுத்துள்ளோம்.என மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
கொக்குவில் மேற்குப் பகுதியல் கற்பூர உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் உரையாற்றுகையில்,
 
கற்பூர உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு வடமாகாணத்திலுள்ள இந்து ஆலயங்களில் எமது உற்பத்தி கற்பூரங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அதற்கேற்ற வகையில் இவ் உற்பத்தி தரமானதாக அமைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
 
மேலும் நாம் வேற்றுமைகள் களையப்பட்டு ஒற்றுமை மேலோங்கச் செய்ய வேண்டும்.எம்மிடையே சமய சம்பிரதாயங்கள் தொடர்பாகவும் தமிழர், முஸ்லிம் என்ற ரீதியிலும் பிளவுகள் காணப்படுகின்றன. இத்தகைய பிளவுகளை களைவதனூடாகவே எமது உரிமைகளையும் ஏனைய வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.