பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2015

வீமன்காமம் வடக்கு பகுதியிலிருந்த பிள்ளையார் கோயிலை காணவில்லை


காணிகளை துப்பரவு செய்ய சென்ற மக்கள் அதிர்ச்சி
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த
வீமன்காமம் பகுதியில் தற்போது மக்கள் மீள் குடியேற்றத்திற்கு கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் அங்கு தமது காணிகளை துப்புரவு செய்யச் சென்ற மக்கள் தாங்கள் காலம் காலமாக வணங்கிவந்த பிள்ளையார் ஆலயத்தை காணாது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள். குறிப்பாக குறிப்பிட்ட பிள்ளையார் ஆலயம்
இருந்த பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் தற்போதும் அமைந்துள்ளது. ஆனாலும் கூட இந்தப் பகுதி வீமன் காமம் பகுதியின் வடக்குப் புறத்தில் புகையிரதப் பாதைக்கு அருகாமையில் உயர் பாதுகாப்பு வலய எல்லையில் அமைந்துள்ளன.
வீமன்காமம் வடக்கு தெற்கு பகுதியில் தமது காணிகளை துப்புரவு செய்யும் மக்கள் தமது காணிகளுக்கு நேர் எதிரே காணப்பட்ட குமாரத்தி பள்ளத்தில் அமைந்திருந்த குமார கோவில் என அழைக்கப்படும். பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் உள்ள அரச மரத்துடன் தற்போது பாரிய பெளத்த கோவில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
தமது பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது பெளத்த கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் தமது கோவில் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றார்கள்.