பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2015

தாலி அகற்றும் விழாவுக்கு எதிராக கருப்பு சட்டை கிழிக்கும் போராட்டம்



திராவிடர் கழகம் நடத்தும் தாலி அகற்றும் போராட்டத்தை கண்டித்து இன்று 14.4.15 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் கருப்பு சட்டை கிழிக்கும் போராட்டமும்  நடைபெறுகிறது. 

வழக்கறிஞர் அய்யா பா. குப்பன்( 35 ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் உழைத்து பின் வெளியேறி, 2009 திலிருந்து திராவிட இயக்கத்தின் தமிழ் இன விரோத போக்கை வெளிச்சம் போட்டு காட்டி வருபவர் ) , சேகர், மாவட்ட பொறுப்பாளர் தமிழர் முன்னேற்றக் கழகம், செல்வா பாண்டியர், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம். புதுமலர் பிரபாகரன் மறத்தமிழர் சேனை , அய்யா அருகோ ஆசிரியர் எழுகதிர், கணேசன் நிறுவனர் தலைவர் தமிழர் பேரரசுகட்சி, (முன்னாள் திராவிடர் கழகம் ) சி. பா. அருட்கண்ணனார் தமிழர் சமூகம் , இராஜ்குமார் பழனிச்சாமி தமிழர் பண்பாட்டு நடுவம், புதுவை அழகர் தமிழர் களம் ,சூரிய பிரகாஷ் தலைவர் உலக தமிழர் பாதுகாப்பு இயக்கம், வழக்கறிஞர் ச.செந்தில்குமார். செயலாளர் மக்கள் மாநாட்டுக் கட்சி, திருமாறன். மரபு வழி தமிழ் தேசிய தக்கார் அவையம், பெருமாள் தேவன், வழக்கறிஞ்சர் பா. வேணுகோபால் தலைவர் தமிழ் தேசிய வழக்கறிஞர் மையம் ஆகியோர் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

 தமிழர் முன்னேற்றக் கழகம் இப்போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.