பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2015

உயர்ந்துகொண்டே போகிறது சம்பளம் நயன்தாரா மார்க்கெட் ரகசியம்

மார்க்கெட் டல்லடித்த பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தமன்னா, ஸ்ரேயா, இலியானா, பிரியாமணி போன்ற பல
நடிகைகள் இன்னமும்போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிம்பு, பிரபுதேவா என இருவரிடம் காதல் தோல்வி அடைந்து இனி நடிப்பதில்லை என்ற முடிவுக்கும் வந்து ஒதுங்கிய நயன்தாரா மீண்டும் ரீஎன்ட்ரி ஆனதும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அவரால் மட்டும் இது எப்படி முடிந்தது என்ற ரகசியம் தெரியாமல் இன்டஸ்ரியில் பலர் குழப்பிக்கொண்டிருக்கின்றனர். அவரது விடாமுயற்சிதான் இதற்கு முக்கிய காரணம் என நயன்தாராவின் வட்டாரம் விளக்குகிறது. காதல் முறிவு என்றதும் மனம் உடைந்து முடங்கிவிடாமல் வாழ்ந்து காட்டுவது என்ற திட எண்ணத்தை அவர் எடுத்ததுடன் சிம்புவுடன் மீண்டும்,   ' இது நம்ம ஆளு'  படத்தில் நடித்துள்ளார். 

தவிர மார்க்கெட் உள்ள நடிகர்கள் மட்டுமே என்றில்லாமல் இளவட்ட ஹீரோக்களுடனும் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியதுதான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம். தற்போது சூர்யாவுடன் மாஸ், ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான், ' நெடுஞ்சாலை ' ஆரியுடன் மாயா படங்களில் நடித்து வருகிறார். தவிர மலையாளத்தில் மம்முட்டியுடன் பாஸ்கர் த ராஸ்கல் படத்திலும் நடிக்கிறார். உதயநிதி ஜோடியாக நடித்துள்ள நண்பேன்டா தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இது நம்ம ஆளு படத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது தனது சம்பளத்தை இரண்டரை கோடி ஆக்கிவிட்டாராம். முதிர்ச்சி அதிகம் தெரியாமலும் கவர்ச்சி சிறிதும் குறையாமலும் இருப்பதே நயன்தாராவின் வெற்றி ரகசியம் என்கிறார்கள்