பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2015

ஆட்சி மாற்றத்திற்கு அசுர பலமாக இருந்து வித்திட்டவர்கள் வடக்கு மக்களே :சந்திராணி


அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது .எனவே இதனை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும் மகளீர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சியில் வடமாகாண பெண்களை வலுவுட்டும் நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
 
 30 வருடகாலமாக போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இவ்வாறான ஒரு பெண்களை வலுவூட்டும் நிகழ்வை ஏற்பாடு செய்து நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் 
 
மேலும் தற்போது நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டு நல்லாட்சி நடைபெற்று வருகின்றது எனவே இந்த ஆட்சி மாற்றத்திற்கு அசுர பலபாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய வடமாகாண மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு. வடக்கு மக்கள் மிகவும் தைரியமானவர்கள் மனவலிமையுள்ளவர்கள் எனவும் தெரிவித்த மகளீர் விவகார அமைச்சர் சந்திராணி. 
 
மேலும் எமக்கு முன்னர் ஒரு பயம் இருந்தது ஜெனீவா மனித உரிமைகள் பிரச்சனை தொடர்பாக ஆனால் இன்று அந்த விடயத்தில் தற்போது எமது பிரச்சினைக்கு நாமே தீர்வு காண கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
குறிப்பாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதற்காக நாடாளுமன்றத்தில் சட்ட வரைபு ஒன்றை சமர்ப்பித்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் சட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டுவர உத்தேசித்துள்ளோம்.
 
இதேவேளை இலங்கையில் 52 வீதமான பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது குறிப்பாக நாடாளுளமன்றத்தில் 5.7 வீதமே பெண்கள் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது எனவே இதனை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.