பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2015

மதிமுகவினர் தடுத்து நிறுத்தம்! வைகோ கைது!



திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டக்கொலை செய்யப்பட்டனர். இதனை கண்டித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (வெள்ளி) காலை வேலூரில் இருந்து தனது கட்சியினருடன் பேரணியாக புறப்பட்ட வைகோ கைது செய்யப்பட்டார். மேலும் பேரணியில் கலந்துகொண்ட மதிமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.