பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2015

சுதந்திரக்கட்சியின்மத்திய குழுவிலிருந்து மேலும் ஐவர் பதவி நீக்கம்


 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவிலிருந்து மேலும் ஐந்துபேர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது. 

 
ஸ்ரீ.சு. கட்சியின் மத்திய குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதான தகவலைத்தாங்கிய கடிதம் இன்றையதினம் அந்த ஐந்து உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில் கடந்த சனிக்கிழமையன்று ஐந்து சிரேஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் மத்தியகுழுவிலிருந்து  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இவர்களுக்கு பதிலாக அர்ஜுன ரணதுங்க ஹிருணிகா பிரேமசந்திர உட்பட ஐவர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=831293981717336809#sthash.FIJxjDfT.dpuf