பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2015

கருணா கைது செய்யப்படுவாரா?

முன்னாள் பிரதியமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானை விசாரணை செய்யுமாறு முஸ்லிம் க
ட்சியொன்று கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தக் கட்சியின் தலைவரினால் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்முனையில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாட்சியமளித்தார்.
இதன் போது 1990ம் ஆண்டு கைது செய்யப்பட்டு காணாமல் போன தனது சகோதரர் அக்றம் சம்பந்தமாகவும் தனது தந்தை சம்பந்தமாகவும் கருணா விசாரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விசாரணைகள் கடந்த இரு நாட்களாய் கல்முனையில் அதன் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.