பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2015

வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் விரைவில் கைது
மஹிந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளை வான் கடத்தல் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
பிரதான சந்தேகநபர்களுடன் இராணுவ அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களில் இருவர் தற்பொழுது ஓய்வு பெற்றவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவர்களை கைது செய்யுமாறு பாதுகாப்பு சபைக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்களுக்கு எதிராக தெளிவான சாட்சியங்கள் காணப்படுவதனால் அவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.