பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2015

காணாமல் போனவர்களை வெலிக்கடை, பூசா தடுப்பு முகாம்களில் தேட உறவினர்களுக்கு அனுமதி


'கணவன்,பிள்ளை, சகோதரன் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காணாமல் போனவர்களின் சொந்தங்கள் நாள் தோறும் செத்து பிழைக்கின்றனர்'
 
காணாமல் போனவர்களின் உறவினர்கள் வெலிக்கடை மற்றும் பூசா தடுப்பு முகாம்களில் தங்களது உறவினர்களை தேடுவதற்கு அனுமதியளிக்கப்பட உள்ளது.
 
சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
 
இதன்படி,கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள பூசா மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை தடுப்பு முகாம்களுக்கு உறவினர்கள் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
 
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
 
காணாமல் போனவர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமைக்கான தெளிவான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அந்த ஆதாரங்களைக் காட்டி, உறவினர்கள் அவர்களை பார்வையிட அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இது ஓர் மனிதாபிமான அடிப்படையிலான பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்.
 
கணவன், பிள்ளை, சகோதரன் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காணாமல் போனவர்களின் சொந்தகள் நாள் தோறும் செத்து பிழைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
காணாமல் போனவர்கள் இருக்கின்றார்கள் என்பது குறித்த சாட்சியங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.