பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2015

பிரான்ஸ் போர்விமானங்களை வாங்கினால் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி!

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கினால் வழக்கு தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர்
சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

 பிரான்ஸ் ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை பிரதமர் மோடி செய்ய கூடாது. இந்த விமானம் எரிபொருள் சிக்கனமற்றது. மற்ற போர் விமானங்களை விட இவை லிபியா, எகிப்து நாடுகளில் மிகவும் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தின.

இதனால் இந்த விமானத்தை வாங்குவதற்கு எந்த நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட சில நாடுகளும் பின்னர் அதை ரத்து செய்துவிட்டன.

பிரதமர் மோடி எந்த நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தால், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து அதை தடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று சுவாமி தெரிவித்துள்ளார்.