பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2015

யாழில் கற்பூர உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
கொக்குவில் மேற்கில் அமைக்கப்பட்ட கற்பூர உற்பத்தி நிலையத்தினை மீன்பிடி  அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று காலை திறந்து வைத்தார்.
 
குறித்த உற்பத்தி நிலையம்  வடமாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நன்கொடை நிதியில் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நல்லூர் பிரதேச செயளாலர் பிரிவினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
 ;
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் முன்னாள் செயளாலர் சத்தியசீலன் போக்குவரத்து அமைச்சின் முன்னால் செயளாலர் வரதீஸ்வரர் வடமாகாணசபையின் உறுப்பினர் பரம்சோதி, கஜதீபன் வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா மேலதிக அரசாங்க அதிபர் ருபினி வரதலிங்கம் மற்றும் நல்லூர் பிரதேச செயலர் செந்தில்நந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.