பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2015

கோத்தாவை கைது செய்யவும்: சட்டமா அதிபர் பரிந்துரை அம்பலம்



கோத்தபாய ராஜபக்சவை அவன் கார்ட் வழக்கில் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பரிந்துரைகள் செய்யதமை அம்பலமாகியுள்ளது.
சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட ஐவர் கைது செய்யப்படவுள்ளனர்.
இலங்கைக்கு அங்கீகரிக்கப்படாத ஆயுதம் இறக்குமதி, (பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆயுத கட்டளைச்சட்டத்தின் கீழ்) துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் செல்லுபடியாகாத அனுமதி பத்திரங்கள் மூலம் வைத்திருந்தமை (ஆயுத கட்டளைச்சட்டம் மற்றும் வெடிப்பொருள் கட்டளை சட்டத்தின் கீழ்) குற்றங்களுக்கும் சதித்திட்டங்களுக்கும் உதவி செய்தமையாகும்.
கடந்த மாதம் 09ம் திகதி ஆங்கில ஊடகமொன்றில் கோத்தபாயவின் கைதை தடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கோத்தபாய ராஜபக்ச உட்பட நான்கு பேர் ஆயத கட்டளைச்சட்டங்கள் மற்றும் ஏனைய சட்டங்களை மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆலோசிக்கப்பட்டதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது செய்யப்படகூடாதென தெரிவித்துள்ளார்.
எவன் கார்ட் பாதுகாப்பு சேவை மற்றும் கடற் போக்குவரத்து சேவைக்கு எதிரான வழக்கு – மிதக்கும் ஆயுத களஞ்சியம்
தவறிழைத்தமை உறுதி –
1. அனுமதியற்ற ஆயுதங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தல் (பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆயுத கட்டளைச்சட்டம்)
2. துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை செல்லுபடியாகாத அனுமதி பத்திரங்கள் மூலம் வைத்திருந்தமை (ஆயுத கட்டளைச்சட்டம் மற்றும் வெடிப்பொருள் கட்டளை சட்டத்தின் கீழ்)
3. குற்றங்களுக்கும் சதித்திட்டங்களுக்கும் உதவி செய்தமை
சந்தேகநபர்கள்
1. நிஷாங்க சேனாதிபதி – எவன்கார்ட் பாதுகாப்பு சேவை தலைவர்
2. மஞ்சுலகுமார யாபா - எவன்கார்ட் பாதுகாப்பு சேவை பணிப்பாளர்
3. கோத்தபாய ராஜபக்ச – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
4. திருமதி டீ.எம்.எஸ்.ஜெயரத்ன - பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்
5. மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ – ரக்ன லங்கா நிறுவனத்தின் தலைவர், இராணுவ சிறப்பு அதிகாரி
ரக்ன லங்கா நிறுவனம் மற்றும் எவன்கார்ட் பாதுகாப்பு சேவை மூலம் ஆயுதங்கள் இறக்குமதி படகுகள் மூலம் மாநிலங்களுக்கும் ஏனையோர்களுக்கும் இழுவை படகுள் மற்றும் வர்த்தக கப்பல்களை பயன்படுத்தி இறக்குமதி செய்தலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக குற்றப்புலனாய் பிரிவினால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
எவன் கார்ட் மற்றும் ஆயதம் களஞ்சயம் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 “மஹாநுவர” என்னும் பெயரில் எவ்ன்காரட் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களுடன் காலி துறைமுகத்தில் சட்டரீதியான அதிகாரமின்றி தரித்து வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 3000ற்கும் அதிகமான துப்பாக்கிகள் (ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஏனைய இராணுவ ஆயுதங்கள் உட்பட) மற்றும் 700 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெடிப்பொருட்களை குறித்த கப்பல் கொண்டிருந்தது.
திருமதி ஜயரத்ன அவர்களால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அவர்களின் அனுமதிக்காக 18 ஒகஸ்ட் மாதம் திகதியிட்டு சமர்பிக்கப்பட்ட சாராம்ச திட்ட அறிக்கையை அவமதித்து கையொப்பமிட்ட ஆவணம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
திரு ஜயரட்ன (மேலதிக செயலாளர்) அவர்களின் 18ம் திகதி செப்டம்பர் 2012 எழுதிய கடிதத்தின் படி மிதக்கும் ஆயுத கப்பல் எவன்கார்ட் X2 இணைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதற்கு X1இற்கு மாறாக திருமதி ஜயரட்ன இது தொடர்பாக மீண்டும் ஒரு கடிதத்தின் மூலம் கடற்படை தளபதிக்கு அனுமதியளிக்குமாறு அவன்கார்ட் கம்பனிக்கு சொந்தமான மாநுவர என்ற ஆயுத கப்பலை தேவைப்படும் போதெல்லாம் காலி துறைமுகத்திற்கு அனுமதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
X2 புலனாய்வு துறையினரின் புலனாய்வு தகவலின் படி இக்கப்பல் தனது நடவடிக்கையை முழுமையாக திருமதி ஜயரட்னவின் அனுமதியுடன் காலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் எந்தவிதமான சர்வதேச கடல் நடவடிக்கையில் ஈடுபடாது இருந்துள்ளது.
இந்த விநியோகக்கப்பல் ஆயுதம் மற்றும் வெடிபொருட்களுடன் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு கடமைகளை முன்பு இலங்கை கடற்படையினர் செய்து வந்த வேலையை ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அதிக இலாபத்தை ஈட்டுவதற்காகவும் கட்டுபாட்டுக்குறிய கடமையை இத்தனிப்பட்ட கம்பனியான அவன் கார்ட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொடுக்கப்பட்ட வருமானத்தை பெறக்கூடிய திட்டத்தை எந்தவிதமான கேள்விப்பத்திரமோ அல்லது முறையற்ற விதத்தில் கொடுக்கபட்டுள்ளது.
பின்னர் எவன்கார்ட் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் குறித்த கப்பலில் இந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் குறித்த ஆயுதங்களுக்கு அரசாங்க ஆய்வு திணைக்களங்களுக்கும் பங்கு இருக்கின்றதா என குற்ற புலனாய்வு பிரிவினால் நடத்தப்பட்டது.
திருமதி. ஜயரத்ன அவர்களால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
1. அனுமதியற்ற ஆயுதங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தல்
2. துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் செல்லுபடியாகாத அனுமதி பத்திரங்கள் மூலம் வைத்திருந்தமை
3. குற்றங்களுக்கும் சதித்திட்டங்களுக்கும் உதவி செய்தமை
ஆயுதப்படை கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு சட்ட விரோத ஆயுதங்கள் இறக்குமதி துப்பாக்கி அவசர சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
1. நிஷாங்க சேனாதிபதி – எவன்கார்ட் பாதுகாப்பு சேவை தலைவர்
2. மஞ்சுலகுமார யாபா - எவன்கார்ட் பாதுகாப்பு சேவை பணிப்பாளர்
இலங்கைக்கு அனுமதியின்றி துப்பாக்கி இறக்குமதி செய்தமைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு
1. கோத்தபாய ராஜபக்ச – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
2. திருமதி டீ.எம்.எஸ்.ஜெயரத்ன - பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்
3. மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ – ரக்ன லங்கா நிறுவனத்தின் தலைவர்,
இராணுவ சிறப்பு அதிகாரி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் துப்பாக்கிகள் இறக்குமதி குற்றம் பயங்கரவாத தடைச்சட்ட அமைப்பின் முன்னுரை,
இலங்கைக்கு உள்ளிருந்து அல்லது வெளியில் இருந்து தனிநபர் குழுவினர் சட்டவிரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
1ஆம் சரத்திற்கமைய எந்த ஒரு தனிநபரும் சட்டப்பூர்வமான அதிகாரமின்றி துப்பாக்கிகள் அல்லது வெடிப்பொருட்கள் இறக்குமதி செய்வது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
3ஆம் சரத்திற்கமைய இவ்வாறான குற்றங்களை மேற்கொண்டவர்கள் அல்லது முயற்சித்தவர்கள் 5 ஆண்டுகளுக்கு குறையாத 20 ஆண்டுகளுக்கு அதிகரிக்காமல் சிறைத்தண்டணை அனுபவிக்க வேண்டும்.
எவன் கார்ட் நிறுவனத்தினால் சட்டவிரோதமான முறையில் ஆயுதம் இறக்குமதி செய்தமை பயங்கரவாத தடைச்சட்ட குற்றமாகும்.
ஆயுதப்படை கட்டளைச் சட்டங்களை மீறி அதிகாரம் பெறாமல் ஆயுதம் இறக்குமதி 22ஆம் சரத்திற்கமைவான ஆயுதப்படை சட்டம், எந்த ஒரு தனி நபரும் துப்பாக்கி ஒன்றினை வைத்திருப்பதற்கு அனுமதி இருத்தல் அவசியம்.
இந்த கட்டளைக்கேற்ப 22(1)ஆம் சரத்திற்கமைய ஒரு தனி நபர் துப்பாக்கி பெற்றுக்கொண்டு 10 நாள்களுக்குள் அனுமதி பத்திரம் பெற்றிருப்பது அவசியமாகும், அனுமதி பத்திரம் கிடைக்காவிடின் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்வது அவசியமாகும்.
அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை,
(a) பெயர் மற்றும் விலாசம்
(b) துப்பாக்கி உரிமம் பெற விரும்பியதற்கான விளக்கம், அதற்கான அவசியம், குறித்த துப்பாக்கி தயாரிப்பதற்கு முன்னர் அதிகாரம் கிடைத்துள்ளதா என்பதாகும்.
இவ்விண்ணப்பங்களை பூரத்தி செய்வதற்கு எவன்கார்ட் நிறுவனம் இணங்கியில்லை.
ஆயுதப்படை கட்டளைச்சட்டத்தின் கீழ் எவன்கார்ட் நிறுவனத்திற்கு துப்பாக்கிகளை வைத்துக்கொள்வதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை.
இதன்படி இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு நிறுவப்பட்டது.
1. நிஷாங்க சேனாதிபதி – எவன்கார்ட் பாதுகாப்பு சேவை தலைவர்
2. மஞ்சுலகுமார யாப்பா - எவன்கார்ட் பாதுகாப்பு சேவை பணிப்பாளர்
அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்தமைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு
1. கோத்தபாய ராஜபக்ச – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
2. திருமதி டீ.எம்.எஸ்.ஜெயரத்ன - பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்
3. மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ – ரக்ன லங்கா நிறுவனத்தின் தலைவர்,
இராணுவ சிறப்பு அதிகாரி இறக்குமதி மற்றும் அதிகாரம் பெறாத வெடிப்பொருட்கள், வெடிப்பொருள் கட்டளைச்சட்டம் மீறல்
8ஆம் சரத்து வெடிப்பொருள் கட்டளைச்சட்டம், வெடிப்பொருட்களை இறக்குமதி செய்ய உரிமம் அல்லது அனுமதியை பெற்றுள்ள நபர் அதை வேறு ஒருவருக்கு வெடிப்பொருள் இறக்குமதி செய்வதற்கு கொடுக்க முடியாது.
9ஆம் சரத்தின் அடிப்படையில், எந்த ஒரு தனி நபருக்கும் குறித்த அனுமதியை வைத்து வெவ்வேறு நோக்கங்கள் கருதி வேறு எந்த வெடிப்பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாது. வெடிப்பொருள் கட்டளை சட்டத்தின் கீழ் எவன்கார்ட் நிறுவனத்திற்கு எந்த ஒரு அனுமதி அல்லது அனுமதி பத்திரம் வழங்கப்படவில்லை.
இதன்படி இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுளள்ளது.
1. நிஷாங்க சேனாதிபதி – எவன்கார்ட் பாதுகாப்பு சேவை தலைவர்
2. மஞ்சுலகுமார யாப்பா - எவன்கார்ட் பாதுகாப்பு சேவை பணிப்பாளர் உரிமம் இன்றி வெடிப்பொருள் ஏற்றுமதி செய்தமைக்கு எதிராக வழக்கு நிறுவப்பட்டது.
1. கோத்தபாய ராஜபக்ச – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
2. திருமதி டீ.எம்.எஸ்.ஜெயரத்ன - பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்.
3. மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ – ரக்ன லங்கா நிறுவனத்தின் தலைவர்,
இராணுவ சிறப்பு அதிகாரி. மேல் குறிப்பிட்டவர்கள் இந்த சதி திட்டங்களுக்கும் குற்றச்செய்ல்களுக்கு உடந்தையாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்டத்தின் கீழ் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் சொத்துகளை விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
3ஆம் சரத்திற்கமைய கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்டத்திற்கமைய எந்த ஒரு தனி நபர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டால் அல்லது சொத்து தொடர்பாக நேரடியாகவே மறைமுகமாகவோ பரிமாற்றத்தில் ஈடுபடல் என்பது பண மோசடி குற்றமாகும்.thx lankasri