பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2015

பிறந்த தினத்தை கடலில் கொண்டாடியவர் மாயம்; நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம்



தொண்டமானாறு அக்கரைக் கடலில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரில் ஒருவர் நேற்று நீரில் மூழ்கிக் காணாமற் போயுள்ளார்.

 
புத்தூர் வடக்கைச் சேர்ந்த கருணானந்தன் மிதுலன் (வயது 22) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமற்போயுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
 
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
புத்தூர் பகுதியில் இருந்து சென்ற 12 பேர் தமது நண்பன் ஒருவனின் பிறந்த நாளைத் தொண்டமானாறு கடற்கரையில் கொண்டாடியுள்ளனர். அனைவரும் கடலில் இறங்கிக் குளித்துள்ளனர். 
 
பின்னர் வெளியே வந்த அவர்கள் கேக் வெட்ட எண்ணிய போது ஒருவரைக் காணவில்லை. அவர்கள் எங்கு தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
 
அவர் நீரில் மூழ்கிக் காணாமற்போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவரைத் தேடும் பணியில் மீனவர்களும், சுழியோடிகளும் தீவிரமாக ஈடுபட்டனர்.ஆயினும் நேற்று இரவு வரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
 
ஏனைய 11பேரையும் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.