பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2015

ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்கிய நபர் ஆபத்தான நிலையில்

17 ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்கிய நபர் ஒருவர் ஆபத்தன நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரே இவ்வாறு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கல்பிட்டி பொலிஸார் நபரை நேற்று கைது செய்திருந்தனர். கைது செய்ய முயற்சித்த போது அவரிடம் 17 சிறிய ஹெரோயின் பக்கெட்டுகள் இருந்தன.
அப்போது அந்த நபர் தன்னிடம் இருந்த ஹெரோயின் பக்கெட்டுக்களை விழுங்கியுள்ளார்.
எவ்வாறாயினும் நபர் விழுங்கிய ஹெரோயின் பக்கெட்டுகள் வயிற்றில் காணப்படுவதாகவும் அதனை எடுக்க சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.