பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2015

இரண்டு வாரங்களுள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை


வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள  இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் வழங்கப்படும் என்று இலங்கையின் குடிவரவு மற்றும் குடிப்பெயர்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் இரட்டைப் பிரஜாவுரிமை கோரி கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பங்களில், 300க்கும் அதிகமான விண்ணப்பதாரிகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது.
அவர்களின் விண்ணப்பங்களை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய விண்ணப்பங்களும் ஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பிரஜாவுரிமை,  குடிவரவுத்துறை அமைச்சின் காரியாலயத்தில் விசேட நிகழ்வொன்று ஒழுங்கு செய்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.