பக்கங்கள்

பக்கங்கள்

7 ஏப்., 2015

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.நா. சபை ஒத்துழைக்கும்


இலங்கையில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியான தனது ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று இ
லங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. உதவிச் செயலாளர் யஹாலியங் ஸு குறிப்பிட்டுள்ளார்.
 
சட்ட நடைமுறைப்படுத்தலை வலுப்படுத்தல், நீதி மற்றும் சமூக ஒருங்கிணைவுக்கான அடைவு என்னும் யு.என்.டி.பி. திட்ட முன்னெடுப்பு முகவர்களுடன் நேற்று மதியம் கொழும்பில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள ஐ.நா. உதவிச் செயலாளர் யஹாலி யங் ஸு, நேற்று கொழும்பில் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். 
 
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதனை மீள்குடியேற்ற அமைச்சில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் செயன்முறையிலுள்ள சவால்கள் தொடர்பிலும், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமாகவும் ஆராயப் பட்டுள்ளது.
 
இதன் பின்னர் சட்ட நடைமுறைப்படுத்தலை வலுப்படுத்தல், நீதி மற்றும் சமூக ஒருங்கிணைவுக்கான அடைவு என்னும் யு.என்.டி.பி திட்ட முன்னெடுப்பு முகவர்களுடன் சந்தித்துக் கலந்துரையாடினார். 
 
நீதித்துறையைப் பலப்படுத்தல் 
நல்லிணக்கத்தை
 
மற்றும் அதன் வினைத்திறனை அதிகரிப்பதற்காக, பால்நிலை மற்றும் பாலியல் வன்முறை சார்ந்த விடயங்களை எதிர்கொள்ளும் வகையில் அரச மற்றும் அரசு சாரா அமைப்புக்களை வலுப்படுத்தல், சமூக ஒருமைப்பாடு, இனநல்லிணக்கத்தை ஊக்குவித்தல் என்பவற்றுக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என்று ஸு இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.