பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2015

எனக்கு அரசியல் கற்பிக்கவேண்டாம்! சந்திரிக்கா, விதுரவுக்கு கடும் அறிவுரை


தாம் அழைக்கப்பட்ட நிகழ்வுக்கு மஹிந்த ராஜபக்சவையும் அழைத்தமை தொடர்பில் சந்திரிக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமரநாயக்கவுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தமது தந்தையான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் 55வது வருட நாடாளுமன்ற அரசியல் தொடர்பிலான நிகழ்வுக்கே விதுர விக்கிரமநாயக்க, சந்திரிக்காவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிகழ்வு நாளை 10ஆம் திகதி ஹொரனையில் இடம்பெறவுள்ளது. இதில் சந்திரிக்கா, ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரை அழைக்க விதுர விக்கிரமநாயக்க திட்டமிட்டிருந்தார்.
இது தொடர்பான அழைப்பு கிடைத்ததும் தொலைபேசியில் விதுரவை தொடர்பு கொண்ட சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்சவுக்கும் முன்வரிசையில் ஆசனமிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்;டுள்ளார்.
எனவே தமக்கு அரசியல் கற்பிக்க முனைய வேண்டாம் என்று விதுரவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அதே தொலைபேசி அழைப்பின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவுடன் தொடர்பு கொண்ட சந்திரிக்கா, அவரது மகனின் நடத்தை குறித்தும் முறையிட்டார்.