பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2015

புலிகளைத் தோற்கடித்த அதிகாரிகள் அனைவருக்கும் பீல்ட் மார்­ல் பதவி - கோத்தபாய


தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் தொடர்புடைய சகல இராணுவ அதிகாரிகளுக்கும் பீல்ட் மார்­ல் பதவி வழங்கப்பட
வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­ கூறியுள்ளார்.
 
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற இரவு, இராணுவ சதிப்புரட்சிக்கான திட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர்மறுத்துள்ளார். 
 
கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
 
"புதிய அரசில் உள்ள சிலர் கூறுவது போன்று சீ­ல்சில் எனக்கு எந்த வங்கிக் கணக்கும் கிடையாது. இலங்கையில் எனக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மாத்திரம் உள்ளது.
 
அமெரிக்காவில் ஒரு வங்கிக் கணக்கு இருந்தது. பின்னர் அதனையும் மூடி விட்டேன்.'' என்று அவர் கூறியுள்ளார்.
 
"கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அன்று, அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தே ஆராயப்பட்டன. தேர்தலுக்குப் பின்னர், சில குழுக்கள் வன்முறைகளை ஆரம்பிக்கலாம் என்று பொலிஸ் தரப்பில் கவலைகள் இருந்தன.
 
எனவே, அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்­, பாதுகாப்புப் படைகள், பொலிஸ் தரப்பினர், சட்டமா அதிபர் ஆகியோர் அது பற்றிக் கலந்துரையாடியிருந்தனர். தேர்தலுக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக மட்டுமே அந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.'' என்றும் அவர் தெரிவித்தார்.
 
"அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கும், அமைதியான முறையில் அதிகாரத்தைக் கைமாற்றம் செய்வது குறித்து கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டது. 
 
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்­ல் சரத் பொன்சேகா, கைது செய்யப்பட்டதை நான் ஆதரிக்கவில்லை. 
 
பொன்சேகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவரை வெலிக்கடைச் சிறையில் அடைக்காமல், இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்குமாறு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­விடம் கேட்டிருந்தேன். சரத் பொன்சேகாவுக்கு அண்மையில் பீல்ட் மார்­ல் பதவி நிலை வழங்கப்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில்,  தொடர்புபட்டிருந்த ஏனைய எல்லா இராணுவ அதிகாரிகளுக்கும், அதுபோன்ற அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்